நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 6, 2019

By | 10th January 2019

1. Swachh Survekshan-2018 (இந்தியாவின் நகர்ப்புற தூய்மை) ஆய்வின் படி முதலிடம் பிடித்த நகரம்

(a) இந்தூர்

(b) மைசூர்

(c) சூரத்

(d)  (a) மற்றும் (a) இரண்டும்

ANS: (d) (a) மற்றும் (b) இரண்டும்

குறிப்பு:

2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மைசூர் மற்றும் இந்தோர் ஆகிய ஆண்டுகளில் இந்த இரு நகரங்கள் முதலிடத்தை பிடித்தன.

———————————————————————————

 

2. புது டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் தொடங்கி வைத்த 27 வது ‘நியூ டெல்லி உலக புத்தக கண்காட்சியின் கருப்பொருள்

(a) Promote the Habit of Reading

(b) Readers with special needs

(c) Reading is everyone’s right

(d) Readers and Publishers

ANS: (b) Readers with special needs

——————————————————————————-

 

3. அணுசக்தி நிறுவலுக்கு எதிரான தாக்குதல் தடை சட்டம் 1988ன் கீழ்  அணுசக்தி நிறுவுதல் பட்டியல்கள் மற்றும்  27 வது முறையாக கைதிகளின் பட்டியல் ஆகியற்றை இந்தியாவுடன்  பரிமாறிக் கொண்ட நாடு

(a) சீனா

(b) பாகிஸ்தான்

(c) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

(d) இலங்கை

ANS: (b) பாகிஸ்தான்

——————————————————————————-

 

4. மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்களைத் தடுக்கத் தவறியதற்காக மேகாலயா அரசாங்கத்தின் மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்த அபராத தொகை

(a) ரூ. 100 கோடி

(b) ரூ. 150 கோடி

(c) ரூ. 200 கோடி

(d) ரூ. 250 கோடி

ANS: (a) ரூ. 100 கோடி

——————————————————————————-

 

5. இந்திய உணவு மற்றும் ஊரக வணிக அமைச்சகத்தின் வர்த்தக ஊக்குவிப்புக் கவுன்சில் மூலம் இண்டஸ் உணவு சந்திப்பு 2019  நடத்தப்படும் இடம்

(a) புனே, மகாராஷ்டிரா

(b) ராஜ்கோட், குஜராத்

(c) குவஹாத்தி, அசாம்

(d) கிரேட்டர் நொய்டா, உத்தரப் பிரதேசம்

ANS: (d) கிரேட்டர் நொய்டா, உத்தரப் பிரதேசம்

——————————————————————————-

 

6. ‘Panj Tirath’ என்ற பழங்கால இந்து மத கோவிலை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்த நாடு எது?

(a) சீனா

(b) பங்களாதேஷ்

(c) இலங்கை

(d) பாகிஸ்தான்

ANS: (d) பாகிஸ்தான்

குறிப்பு:

‘பஞ்ச் திரத்’ பெஷாவர், ஹஸ்த்நக்ரி நகரில்  உள்ள இந்து மத  கோவில்.  இது 1000 ஆண்டுகள்  பழமை வாய்ந்தது.

——————————————————————————-

 

7. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018 ன் படி ‘பொருளாதார குற்றவாளி’ என நிதி மோசடி சட்டத்தின் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட முதல் நபர்

(a) நீரவ் மோடி

(b) விஜய் மல்லையா

(c) சித்தார்த் மல்லையா

(d) தினேஷ் வாடியா

ANS: (b) விஜய் மல்லையா

——————————————————————————-

 

8. திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முனைவோர் (MSDE) அமைச்சகம் நடத்தும் 3 வது தேசிய தொழில் முனைவோர் விருதுகள் நடைபெறும் இடம்

(a) புது தில்லி

(b) மும்பை

(c) பெங்களூரு

(d) ஹைதராபாத்

ANS: (a) புது தில்லி

——————————————————————————-

 

9. போலாவரம் நீர்ப்பாசன திட்டத்தை சிறந்த திட்டமிடல் மற்றும் கட்டியதற்காக ஆந்திராவின் நீர்வழங்கல் துறை அமைச்சர் தேவிநெணி உமாமஹேஸ்வர ராவ் மத்திய நீர்வழங்கல் மற்றும் சக்தி விருது – 2019 ‘ பெற்றார். போலாவரம் நீர்ப்பாசன திட்டம் அமைந்துள்ள நதி

(a) கிருஷ்ணா நதி

(b) கோதாவரி நதி

(c) பிரம்மபுத்ரா நதி

(d) நர்மதா நதி

ANS: (b) கோதாவரி நதி

——————————————————————————-

 

10. வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் புதிய உரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர்

(a) சாபிலேந்திர ராவுல்

(b) ருத்ரமூர்த்தி S

(c) சாமுவேல் எரிக்

(d) ஷானா சிங்

ANS: (a) சாபிலேந்திர ராவ்

——————————————————————————-

 

11. நேபாள உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்

(a) நீதிபதி சோலேந்திர ஷாம்ஷெர் J. B. ரானா

(b) நீதி ஓம் பிரகாஷ் மிஸ்ரா

(c) நீதிபதி பமல் குமார் சிங்லா

(d) நீதி அமல் நாத் பரிவார் 

ANS: (a) நீதிபதி சோலேந்திர ஷாம்ஷெர் J. B. ரானா

——————————————————————————-

 

12. ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஜிப்மர்), புதுச்சேரி கல்வி நிறுவனத்தின் புதிய இயக்குனர்

(a) Dr. சுரேஷ் ராம்பால்

(b) Dr. ராகேஷ் அகர்வால்

(c) Dr. கைலாஷ் சந்திரா

(d) Dr. ஷேகர் குமார்

ANS: (b) Dr. ராகேஷ் அகர்வால்

——————————————————————————-

 

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 6, 2019 (pdf Download)

94 total views, 1 views today

Leave a Reply